ஆசியான் மாநாட்டில் ஆப்சென்ட்..டிரம்ப் முகத்தில் முழிக்க மோடிக்கு பயம்! விளாசிய காங்கிரஸ்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மலேசியாவில் ஆக. 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க மாட்டார் எனவும், மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றுவார் என்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஸ்வகுருவான மோடி, தனது நண்பரான டிரம்பை சந்திக்க மறுப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மலேசியாவில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பான ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பங்கேற்க மாட்டார் என அறிவித்திருக்கிறார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கிய உலக தலைவர்கள் கலந்து கொள்வதால், மோடியும் நேரடியாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி பண்டிகை காரணமாக பிரதமர் மோடி நேரில் வர முடியவில்லை என கூறியுள்ளார் மலேசிய பிரதமர்.

Narendra Modi ASEAN Congress

ஆசியான் உச்சி மாநாடு

மேலும், பீகார் சட்டப்பேரவை பிரசாரத்தை பிரதமர் மோடி நாளை தொடங்க உள்ளதால், அந்த காரணத்தாலும் அவர் நேரில் கலந்து கொள்ளமுடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மோடியின் நேரடி பங்கேற்பு டொனால்ட் டிரம்ப் உடன் சந்திப்பு வழிவகுக்கும் என்பதால், பயணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசியலைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் முடிவடைந்த பிறகு தான், இந்திய தலைவர்கள் அந்நாடுகளின் பிரதிநிதிகளை நேரில் சந்திப்பார்கள்.

நரேந்திர மோடி

2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பிறகு, 2022-ஆம் ஆண்டு தவிர அனைத்து ஆசியான் உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியிலும், பிரதமர் மோடி நேரில் செல்லாமல், வெளியுறவுத்துறை இணையமைச்சரை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்நிலையில், விஸ்வகுருவான மோடி, தனது நண்பரான டிரம்பை சந்திக்க மறுப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,' பிரதமர் மோடி கோலாலம்பூரில் நடக்கும் உச்சி மாநாட்டுக்கு செல்வாரா இல்லையா? என்ற ஊகங்கள் பல நாள்களாக வெளியாகி வந்தன. தற்போது அவர் செல்லமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் உலகத் தலைவர்களை கட்டியணைத்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பையும், தன்னை 'விஸ்வகுரு' என்று கூறிக் கொள்ளும் வாய்ப்பையும் அவர் இழக்க நேரிடும். கோலாலம்பூர் செல்லாததற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை.

காங்கிரஸ் விமர்சனம்

பிரதமர் அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்திக்க விரும்பவில்லை. இதே காரணத்தால், எகிப்தில் நடந்த காஸா அமைதி மாநாட்டையும் அவர் புறக்கணித்தார். சமூக வலைதளங்களில் டிரம்பை புகழ்ந்து மோடி பதிவிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாகவும், 'ஆபரேஷன் சிந்தூரை' தடுத்ததாகவும் மோடி உறுதி அளித்ததாக சொன்ன டிரம்பை நேரில் சந்திப்பது வேறு விஷயம். இது மோடிக்கு மிகவும் ஆபத்தானது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+