ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ரூ.83,300 கோடி திட்டங்களை 'பிரசாரத்துடன்' வாரி வழங்கும் பிரதமர் மோடி!
ராஞ்சி: சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் வருகிறார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை ரூ.83,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க போராடுகிறது; பாஜக கூட்டணியோ ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் 2 மணியளவில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.83,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களின் விரிவான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ரூ.79,150 கோடிக்கும் அதிகமான செலவில் தர்தி ஆபா பழங்குடியினர் கிராம வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார். 549 மாவட்டங்கள் மற்றும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,740 வட்டாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை இந்த இயக்கம் உள்ளடக்கும். மத்திய அரசின் 17 அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் செயல்படுத்தப்படும் 25 செயல்பாடுகள் மூலம், சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழங்குடியின சமூகங்களுக்கான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.2,800 கோடி மதிப்பிலான 40 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமரின் பழங்குடியின ஆதிவாசி நியாய மகா (PM-JANMAN) திட்டத்தின் கீழ், ரூ.1,360 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் 1380 கி.மீ-க்கும் அதிகமான சாலைகள், 120 அங்கன்வாடிகள், 250 பல்நோக்கு மையங்கள் மற்றும் 10 பள்ளி விடுதிகள் அடங்கும். மேலும், பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் 3,000 கிராமங்களில் 75,800-க்கும் மேற்பட்ட குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு (பிவிடிஜி) மின்சார வசதி, 275 நடமாடும் மருத்துவக் குழுக்களை இயக்குதல், 500 அங்கன்வாடி மையங்களை செயல்படுத்துதல், 250 வன் தன் விகாஸ் கேந்திரங்களை நிறுவுதல் மற்றும் 5,550-க்கும் மேற்பட்ட எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய கிராமங்களை 'நல் சே ஜல்' மூலம் செறிவூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளையும் அவர் வெளியிடுவார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications