இலங்கைப் பயணத்தை முன்னிட்டு தமிழில் டுவீட்டிய மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கை செல்வது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இரண்டு நாள் பயணமாக இலங்கையில் இருப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட்டியுள்ளார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். https://t.co/MHGfTxALih
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்.
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் வெசாக் (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் புத்த மதத்தினர் அதிகம் வசிப்பதால் புத்த பூர்ணிமா அங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நாளை முதல் 3 நாட்கள் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி இரண்டு விஜயத்தைமேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பேன் என்றும் அவர் டூவிட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications