For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

69வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி பிரதம நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை பலத்த பாதுகாப்புடன் ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி தமது பதவி காலத்தில் 2வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியுள்ளார்.

PM Narendramodi unfurls the Tricolour at Redfort

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் டெல்லி செங்கோட்டை வருகை தந்தார்.

pmmodi

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின சிறப்பு உரையாற்றினார். பொதுவாக செங்கோட்டையில் கடந்த காலங்களில் குண்டுதுளைக்காத மேடையில்தான் பிரதமர்கள் உரையாற்றுவர். ஆனால் கடந்த முறை முதல் முறையாக இந் சம்பிரதாயத்தைப் பிரதமர் மோடி உதறினார். அதைப் போல இம்முறையும் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படாமல் சாதாரண மேடையில் நின்றே பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

சுதந்திர தின விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

English summary
PM Narendra Modi unfurls the national flag from the ramparts of the Red Fort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X