பெரியபாண்டியின் உடல் ஜோத்பூரில் பிரேத பரிசோதனை - சொந்த ஊரில் இறுதி அஞ்சலி
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கப் போன போது நடந்த சண்டையில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் உடல் ஜோத்பூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் உடல் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தனி விமானத்தில் தமிழகம் கொண்டு வரப்பட்டு சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது.
சென்னை, கொளத்தூாில் நகைக்கடை கொள்ளை தொடா்பாக சென்ராம், சங்கர்லால் உள்பட 4 பேரை காவல்துறையினா் கைது செய்திருந்தனா்.

வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரியை கைது செய்ய 6 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜெய்பூா் அருகே பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் குற்றவாளிகள் பதுங்கியிருந்தனா். அவா்களை இன்று அதிகாலை பிடிக்க முயன்றபோது கொள்ளையா்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.
நாதுராமின் உறவினர்கள் பலர் தமிழக காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகரின் துப்பாக்கியை பறித்த கொள்ளையர்கள் சராமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளா் பொியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். கொளத்தூா் காவல் ஆய்வாளா் முனி சேகா் காயமடைந்தாா்.
இன்ஸ்பெக்டர் முனிசேகர் அளித்த புகாரின் பேரில் பாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து 9 பேரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையர்களிடமிருந்து தமிழக போலீசார் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் உடலை மீட்டு ஜோத்பூருக்கு கொண்டு வந்தனர். அங்கு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து தனி விமானம் மூலம் நாளை தமிழகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. சொந்த ஊரில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications