For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் மீதான பொது விவாதத்திற்குத் தயாரா...? கெஜ்ரிவாலிடம் பிரதமர் சவால்

Google Oneindia Tamil News

டெல்லி: தேவையில்லாமல் உண்மையான அதிகாரிகள் மீதும் வீண் பழி போடுகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அது தவறு. ஊழல் மீதான பொது விவாதத்திற்கு அவர் தயாராக இருந்தால், நேருக்கு நேர் விவாதம் புரிய அவர் முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், கெஜ்ரிவாலுக்கு பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.

மத்திய தலைமை கண்காணிப்பு ஆணையத்தின் பொன் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசுகையில் இப்படி கெஜ்ரிவாலுக்கு சவால் விட்டார்.

மேலும், ஊழலை வைத்து அரசியலாக்கக் கூடாது என்றும் அவசியமில்லாமல் நல்ல அதிகாரிகள் மீதும் பழி சுமத்தக் கூடாது என்றும் அவர் கெஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Manmohan Singh

இது குறித்து நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது :-

சந்தேகத்தை தவிர்க்க வேண்டும்...

நாம் நேர்மையான அதிகாரிகளின் நடத்தையிலும் அவர்களின் உண்மைத் தன்மையிலும் சந்தேகப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்களது மன உறுதியைக் குலைத்து விடும்.

நிர்வாக மேம்பாடே முக்கியம்....

ஊழலுக்கு எதிரான எந்த ஒரு செயலும், அரசு நிர்வாகத்தின் மேம்பாட்டையே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அதைப் பாதிக்கும் வகையில் அது இருக்கக் கூடாது.

வீண்பழி கூடாது...

இது எப்போது சாத்தியம் என்றால், முடிவுகளில் தெளிவும், துணிச்சலும் இருக்கும்போதுதான் சாத்தியம். எனவே நேர்மையான அதிகாரிகளைத் தட்டிக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களைச் சந்தேகப்பட்டு, வீண் பழி சுமத்துவது கூடாது.

ஊழலுக்கு எதிரான விவாதங்கள்....

ஊழலுக்கு எதிரான விவாதங்கள் வரவேற்கப்படக் கூடியதே. அதேசமயம், அதை தேவையில்லாமல் பொதுப் பிரச்சினையாக்கி அதை அரசியல்படுத்தக் கூடாது.

காங்கிரஸ் ஊழகுக்கு எதிரானது....

இந்த நிலைதான் தற்போது உள்ளது. அதைத் தவிர்க்க வேண்டும். ஊழல் எதிர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் துணைபோகாது என்று நினைவில் வைத்துகொள்ள வேண்டும் . காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது.

புதுமையான முடிவுகள்...

நாம் செய்யும் செயல்கள் தைரியமாகவும் புதுமையான முடிவுகளை மேம்படுத்தினால் மட்டுமே நேர்மையான அதிகாரிகளை உருவாக்க முடியும்" என இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் தெரிவித்தார்..

English summary
Prime Minister Manmohan Singh rapped Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday saying that there was a need to trivialise debate on corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X