நிரவ் மோடியை பார்த்தால் செருப்பாலேயே அடிப்பேன்.. கைதான நிர்வாகியின் மனைவி ஆவேசம்
Recommended Video

மும்பை: நிரவ் மோடி இந்தியா வந்தால் செருப்பாலேயே அடிப்பேன் என கைதான நிர்வாகி ஒருவரின் மனைவி ஆவேசமாக கூறியுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல இடங்களில் தனது நகைக்கடைகளை வைத்துள்ளார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகாரிகள் விசாரணை
மேலும் நிரவ் மோடியின் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஏராளமான நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அர்ஜுன் பாட்டீலுக்கு கஸ்டடி
இந்நிலையில் நிரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் நிறுவனத்தின் மூத்த செயலதிகாரி அர்ஜுன் பாட்டீல் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி 12 நாட்கள் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.

சுஜாதா பாட்டீல்
லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்குக்கு விண்ணப்பங்களைத் தயார் செய்து கொடுத்தவர் அர்ஜுன் பாட்டீல்.
இந்நிலையில் அர்ஜுன் பாட்டீலின் மனைவி
சுஜாதா பாட்டீல் மும்பை செஷன்ஸ் கோர்ட்டுக்கு வந்திருந்தாரர்.
|
செருப்பாலேயே அடிப்பேன்
அப்போது நிரவ் மோடி இந்தியா வந்தால் காலணிகளைக் கழற்றி அடிப்பேன் என்று அவர் ஆவேசமாக கூறினார்.
நிறுவனம் என்ன கூறியதோ அதைத்தான் என் கணவர் செய்தார். சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை என கூறினார் கத்தினார். இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications