எப்புடி இருந்த மனுசன்.. கைதான சந்திரபாபு நாயுடு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ் -ரிமாண்ட் ஆவாரா?
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு நந்தியாலா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். அதன் பின்னர், அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பேருந்து நிறுத்தி உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, நந்தியாலா போலீசார் நேற்று அதிகாலை 6 மணியளவில் அங்கு வந்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாநில குற்றப் புலனாய்வுத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அவர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக சிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு சந்திரபாபு நாயுடு மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவரையே அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கும் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications