டெல்லி, ஹரித்துவாரில் மதனைத் தேடும் போலீசார்!
டெல்லி: டெல்லி, ஹரித்துவார் மற்றும் இமயமலைப் பகுதிகளில் மதனைத் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர் போலீசார்.
வாரணாசி கங்கையில் சமாதி ஆகிறேன் என்று தற்கொலைக் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான மதன் குறித்து கடந்த 9 நாட்களாக எந்தத் தகவலும் இல்லை.

மதன் திடீரென காணாமல் போனது குறித்து அவரது 2 மனைவிகளும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் மதன் மீது பணமோசடி புகார்களும் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது. எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு இது வரையில் வாங்கி தரவில்லை என்றும் ஒருபுறம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில் வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ்.ஆர்.எம் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்லூரி சீட் தொடர்பாக அவரிடம் இருந்து பணம் எதுவும் பெறப்படவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதனின் பெற்றோர் பாலகிருஷ்ணன்- தங்கம் மற்றும் மனைவி சுமலதா ஆகியோர் மதனை கண்டு பிடித்து தருமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று இதுவரை எந்த தவகலும் கிடைக்காததால் மதனை கண்டு பிடித்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, காசி செல்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மதன், டெல்லி சென்று தங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரித்து வருகின்றனர்.
ஹரித்துவார் உள்ளிட்ட இமயமலைப் பகுதியில் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தங்கியிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
காசியிலும் அவரைத் தேடும் பணி தொடர்வதாகத் தெரிகிறது. மதன் பயன்படுத்திய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியான அனைத்துமே யூகத் தகவல்களே. எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications