பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடம்னா ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்கலாமா? உ.பி. பேராசிரியருக்கு நேர்ந்த கதி!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில மீரட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சீமா பன்வார், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து வினாத்தாளுக்கான கேள்வி தயாரித்ததால் 'வாழ்நாள் தடை' விதித்துள்ளது ஆளும் பாஜக அரசு. அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து கேள்வி இடம் பெறச் செய்தது மிகப் பெரிய குற்றம் என பாஜகவின் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சீமா பன்வாருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது உ.பி. மாநில ஆளும் பாஜக அரசு.
உ.பி. மாநில மீரட் பல்கலைக் கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் 2-வது செமஸ்டர் தேர்வுகள் கடந்த 2-ந் தேதி நடைபெற்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த கேள்வி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விமர்சிப்பதாக இருக்கிறது என குற்றம்சாட்டியது பாஜக. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், இந்த வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் சீமா பன்வாருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசியல் அறிவியல் பாடம் என்பதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து கேள்வி தயாரிக்கப்பட்டதே தவிர தமக்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என சீமா பன்வார் விளக்கம் அளித்தார். ஆனாலும் உ.பி. மாநில அரசு இதனை ஏற்கவில்லை.
தற்போது பேராசிரியர் சீமா பன்வாருக்கு வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட அனைத்து தேர்வு சார்ந்த பணிகளுக்கும் 'வாழ்நாள் தடை' விதித்து அதிர்ச்சி உத்தரவை உ.பி. மாநில அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உ.பி. அரசின் விளக்கத்தில், வினாத்தாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து மட்டுமல்ல மாவோயிஸ்டுகள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றிருந்தன; இதுதான் சர்ச்சைக்கு காரணம்; ஆகையால் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க சீமா பன்வாருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications