வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது: பிரவீண்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வாக்களிக்க வந்தார்.

Polling in TN peaceful says Praveen Kumar

அப்போது பிரவீண் குமாரிடம் வாக்காளர்கள் வாக்குவாதம் செய்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என ஏராளமான வாக்காளர்கள் முற்றுகையிட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த பிரவீண்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என்றார்.

சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எங்கேயாவது பிரச்னை எனத் தெரிந்தால் உடனே பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+