பிரபல மலையாள நடிகர், அரசியல் பிரமுகர்கள் என்னை சீரழித்தனர்: சோலார் பேனல் சரிதா நாயர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர், அரசியல் பிரமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என சோலார் பேனல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான சரிதா நாயர் கேரளா தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுப்பதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக சரிதா சிறையில் இருக்கையில் எழுதியதாகக் கூறி கேரளாவில் ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் கேரள மாநில நிதி அமைச்சர் மணியின் மகனும், எம்.பியுமான ஜோஸ் கே. மணி தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதாக குறிப்பிட்டிருந்தார் என்று செய்திகள் வெளியானது. இதை சரிதாவும், ஜோஸும் மறுத்தனர்.

இந்நிலையில் இது குறித்து சரிதா நாயர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

போலி

போலி

நான் எழுதியதாக மீடியாவில் வெளியாகியுள்ள கடிதம் போலியானது. அதில் 22 பக்கங்கள் உள்ளன. யாரோ என்னைப் போன்றே எழுதியுள்ளனர். நான் உண்மையில் எழுதிய கடிதத்தில் 30 பக்கங்கள் உள்ளன. உண்மை கடிதத்திற்கும், போலிக் கடிதத்திற்கும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை.

உண்மை

உண்மை

என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை வெளியே தெரிவிக்க விட மாட்டேன் என்கிறார்கள். அவரவர் சுயலாபத்திற்காக உண்மையை திரித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிழைப்பை நடத்த சில மீடியாக்கள் சொந்தமாக கதை எழுதுகின்றன என்று தெரிவித்தார் சரிதா.

மீடியா

மீடியா

தான் எழுதிய கடிதத்தில் என்ன உள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் சரிதா. அதில் உள்ள விஷயங்கள் தெரியவந்தால் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று அவர் கூறினார். ஆனால் கடிதத்தை மீடியாக்கள் முன்பு காட்டினார். அதை சிலர் புகைப்படம் எடுத்தனர்.

மலையாள நடிகர்

மலையாள நடிகர்

மீடியாக்கள் எடுத்த புகைப்படத்தில் சரிதாவின் கடிதத்தில் தற்போது பிரபலமாக உள்ள மலையாள நடிகர் ஒருவர் அவரை பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சரிதா டெல்லி சென்றபோது அவரை அரசியல் பிரமுகர்கள் பலாத்காரம் செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தில் அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+