ராக்கி பரிசை டெலிவரி செய்யாத போஸ்ட் மேனுக்கு ரூ. 17,000 அபராதம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே. சிங்கால். இவர் டெல்லியில் வசிக்கும் தனது சகோதரிக்கு கடந்த ஆண்டு ரக்ஷாபந்தன் பரிசாக 500 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். இந்தப் பணம் தனது சகோதரிக்கு சென்று சேரவில்லை என்பது நாளைடைவில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சிங்கால் ஷாமிலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ரக்ஷாபந்தன் பரிசை டெலிவரி செய்யாத தபால்காரருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications