பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசு முறை பயணமாக சீனா பயணம்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா செல்கிறார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு, சீனாவுக்கு பிரணாப் சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். அவருடன் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மற்றும் 4 எம்.பிக்கள் கொண்ட குழுவும் சீனா செல்கிறது.

சீனப் பயணத்தின் முதல்கட்டமாக குவாங்சூ நகருக்கு பிரணாப் இன்று செல்கிறார். இதன்மூலம், அந்நகருக்கு செல்லும் முதல் இந்தியத் தலைவர் என்னும் பெருமையை அவர் பெறுகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார். அதையடுத்து, சீன-இந்தியத் தொழிலதிபர்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.
பிறகு, அந்த மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதையடுத்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு பிரணாப் செல்கிறார். அங்கு அவர், சீன அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டுப் பிரதமர் லீ கெகியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
அப்போது, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டவை குறித்து சீனத் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தியா-சீனா இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications