சவுதி அரேபியாவிலிருந்து வந்து மும்பை பெண்ணை கர்ப்பிணியாக்கிய தூதரக அதிகாரி! சுஷ்மாவிடம் உதவி
மும்பை: சவுதி தலைநகர், ரியாத் நகரிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
மும்பை, கண்டிவலி பகுதியை சேர்ந்தவர் சேத்தனா (25-பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும், ரியாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும், ஜபியுல்லா கானுக்கும், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் சாட்டிங், பிறகு செல்போன் எண் பரிமாற்றம் என வளர்ந்த பழக்கம், பிறகு காதலில் சென்று முடிந்தது. உ.பி.யை சேர்ந்தவரான ஜபியுல்லா கான், கடந்த ஏப்ரலில் மும்பை வந்து 5 நாள் தங்கியுள்ளார்.

உல்லாசம்
இந்த 5 நாட்களும், காதலர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு ஜபியுல்லா கான், ரியாத் சென்றுவிட்டார்.

கரு உருவானது
விரைவில் திருமணம் செய்ய மீண்டும் வருவதாக ஜபியுல்லா கான் கூறியிருந்த நிலையில், அவர் வரவில்லை. ஆனால் அவரின் வாரிசுதான், சேத்தனா வயிற்றில் வளர்ந்தது. இதுகுறித்து போனில், சேத்தனா கூறியபோது, கண்டிப்பாக திருமணம் செய்வதாக கூறிய ஜபியுல்லா கான், நாம் குடியிருக்க தேவையான ஃபர்னிச்சர்களை வாங்கி வை.. என சேத்தனாவிடம் கூறியுள்ளார்.

ரூ.10 லட்சத்துக்கு ஃபர்னிச்சர்
இதை நம்பிய சேத்தனா சுமார் ரூ.10 லட்சம் செலவில் பல்வேறு ஃபர்னிச்சர்களை வாங்கினாராம். ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என ஜபியுல்லா கான் திடீரென மறுத்துவிட்டார். இதனால் 5 மாத கருவை, சேத்தனா கலைத்துள்ளார்.

போலீசில் புகார்
ஜபியுல்லா கான் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த, சேத்தனா, அதுகுறித்து, போலீசில் புகார் அளித்தார். ஆனால், ஜபியுல்லா கான் வெளிநாட்டில் இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க திணறி வருகிறார்கள்.

ஆதாரம்
இதுகுறித்து சேத்தனா கூறுகையில், கருவை கலைத்தபோது, மரபணுவை கூட ஆதாரத்திற்காக சேகரித்து வைத்துள்ளேன். எனவே ஜபியுல்லா கான் மீது நடவடிக்கை எடுக்க சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளேன். இது ஒரு பலாத்காரம் என்றுதான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு சேத்தனா தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications