பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரணாசி: பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசி பகுதியில் படகு சவாரி மேற்கொண்டார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 9ஆம் தேதி இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். டெல்லி விமான நிலையத்தில் மெக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Prime Minister Modi and France president Emmanuel Macron Boating in Varansi

இதைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் வந்தனர். இதன் ஒருபகுதியாக வாரணாசி சென்ற அவர்கள் அஸி காட் பகுதியில் படகு சவாரி மேற்கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Modi and France president Emmanuel Macron Boating in Varansi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற