உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு- போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு!
ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்
ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இம்மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி, செலென்ஸ்கியிடம் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தன்னைப் பொறுத்த வரை இது அரசியல் பிரச்சனையோ, பொருளாதார பிரச்சினையோ அல்ல எனவும், மாறாக மனிதநேயம், மனித விழுமியங்கள் பற்றிய பிரச்சினை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உக்ரைனின் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, அந்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு நடத்த உக்ரேனிய கல்வி நிறுவனங்கள் எடுத்த முடிவை வரவேற்றார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிலையை சீர் செய்ய இந்தியாவும், தானும் தனிப்பட்ட முறையில் அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி, செலென்ஸ்கியிடம் கூறினார்.
உக்ரைன் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் கூறினார். உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் செலென்ஸ்கி பிரதமருக்கு விளக்கினார். இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாரிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
இம்மாநாட்டின் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். இம்மானுவேல் மேக்ரானுடனனா சந்திப்பில், 2023 ஜூலை 14-ம் தேதி நடைபெறவுள்ள பாஸ்டில் தினத்திற்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, வியட்நாம் நாட்டின் பிரதமர் ஃபாம் மின் சின், கொரிய குடியரசு அதிபர் யூன் சுக் யோல். ஜப்பானியப் பிரமுகர்களான டாக்டர் டோமியோ மிசோகாமி, ஹிரோகோ தகயாமா உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மேலும் பிரதமர் மோடி ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். இத் திறப்பு விழாவின் போது, பிரதமரின் சிறப்பு ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நகாதானி ஜென், ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மட்சுயி, ஹிரோஷிமா நகர சட்டமன்றத்தின் சபாநாயகர் தட்சுனோரி மோட்டானி, ஹிரோஷிமாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், இந்திய சமூக உறுப்பினர்கள், ஜப்பானில் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications