‛‛சிஏஏ அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது’’.. மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி
கொல்கத்தா: லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என வங்க மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாக கூறியுள்ளார். பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
"வங்க மக்களுக்கு நான் 5 வாக்குறுதிகளை கொடுக்கிறேன். மதத்தின் அடிப்படையில் யாரும் இடஒதுக்கீடு வழங்க முடியாது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு மீது யாரும் கை வைக்க முடியாது, ராம நவமி கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோவிலை அப்புறப்படுத்த முடியாது, சிஏஏ அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என நான் உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ராமர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வோம் என ராகுல் காந்தி கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது ராமர் கோயில் குறித்து பிரதமர் பேசியிருக்கிறார்.
சிஏஏ குறித்து பேசிய மோடி, "பலருக்கும் குடியுரிமையை வழங்கும் சிஏஏவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வில்லனாக சித்தரித்துள்ளன. சிஏஏ என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்கும் சட்டமாகும். இது யாருடைய குடியுரிமையையும் ரத்து செய்யாது. இதை எதிர்ப்பவர்கள் பொய்யர்கள்.
ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. முன்பெல்லாம், ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சியே நடந்தது. ஆனால் இப்போது திரிணாமுல் காங்கிரஸ் உதவியுடன் ஊடுருவல்காரர்கள் அத்துமீற தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்துகிறார்கள்" என குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் தற்போது கம்யூனிஸ்ட் தலைவர்களே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மொத்தமிருந்த 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதியிலும், சிபிஐ (எம்) 2 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் 2019ல் இது அப்படியே தலைகீழாக மாறியது. பாஜக 18 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் சுருங்கியது. சிபிஎம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications