பிரதமர் மோடியின் மனைவிக்கு 24 மணி நேர பாதுகாப்பு
டெல்லி: பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னிற்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அவர் வசித்து வரும் வீட்டை சுற்றிலும் வாகனம் மூலம் கண்காணிக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரிவேதி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா தனது மூத்த சகோதரரான அசோக் மோடியுடன் உஞ்ஜாவில் சேர்ந்த ராம்ஜி மந்திருக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார். அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications