ராமரை கற்பனை என்றவர்கள்.. தற்போது ஜெய்ஸ்ரீராம் என்கிறார்கள்.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அட்டாக்
சண்டிகர்: இன்று ஹரியானா மாநிலம் சென்ற பிரதமர் மோடி அங்கு ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்துள்ளார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டெல்லி நோக்கி செல்வோம் என்ற பெயரில் விவசாயிகள் தொடங்கியுள்ள இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லைகளில் விவசாயிகள் மேற்கொண்டு வர முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மீது ஹரியனாவின் ஷம்பு பகுதியில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்கினர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தை அமைதியான முறையில் தொடருவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஹரியானா மாநிலம் சென்றார். ஹரியானாவில் உள்ள ரேவரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டில் அமைய உள்ள 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும். 210 ஏக்கர் பரப்பளவில் 1,650 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இதுதவிர குருகிராம் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதேபோல் ரோஹ்டக் - மேஹ்கம் - ஹ்ன்சி ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் இதனை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில் பாதை திறக்கப்பட்டதன் மூலம் ரோஹ்டக் - ஹிசாக் இடையேயான பயணம் தூரம் கணிசமாக குறையும்.
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்த பிறகு பிரதமர் மோடி அங்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹரியானாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தொடந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமரை கற்பனை என்று கூறிவந்த காங்கிரஸ் தற்போது ஜெய்ஸ்ரீராம் சொல்கிறது என்று விமர்சித்து பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications