அரசியலில் நான் குதிக்கவில்லை: பிரியங்கா காந்தி மறுப்பு!
டெல்லி: தான் அரசியலுக்கு வருவதாக கூறப்படுவது கற்பனையான தகவல் என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியில், காங்கிரசின் முக்கிய முகமான பிரியங்கா காந்தி விரைவில் அரசியலுக்கு வருகிறார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அன்மையில் அளித்த ஒரு பேட்டியில், பிரியங்கா காந்தி காங்கிரசில் இன்னும் தீவிரமாக பங்காற்ற வேண்டும். கட்சியில் முக்கிய பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுவதால் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இல்லை என்று கொள்ளக் கூடாது.
இதில் எந்த ஒப்பீடும் கூடாது. ராகுல் காங்கிரசின் துணைத் தலைவர். சோனியா காந்தி தலைவர். எனவே, காந்தி குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் கட்சியில் இருந்தால் அது கட்சிக்கு இன்னும் வலிமை சேர்க்கும் என்று கூறியிருந்தார்.
இதனால் பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவோ அல்லது உத்தரபிரதேச மாநிலத்தின் தலைவராகவோ நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
இந்நிலையில், தம்மைப் பற்றி தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு பிரியங்கா காந்தி முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையானவை.
இந்த பிரச்னை கொண்டு வரப்பட்டுள்ள தருணமும் தவறுதலானது. அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற வதந்திகளை அனைவரும் ஊக்கப்படுத்தாமல் இருந்தால் அதற்காக அனைவருக்கும் நான் மிகுந்த நன்றி உள்ளவராக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications