காஷ்மீருக்கு திடீர் பயணம் செய்த பிரியங்கா.. கோவிலில் சாமி கும்பிட்டார்!
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு திடீர் பயணமாக போன காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு அதே வேகத்தில் டெல்லி திரும்பினார்.
நேற்று வடக்கு காஷ்மீரின், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மாதா கீர்பவானி கோவிலுக்கு பிரியங்கா திடீர் விசிட் அடித்தார். அங்கு மனமுருக சாமி கும்பிட்டார். பின்னர் கோவிலிலிருந்து புறப்பட்டு டெல்லி திரும்பினார்.

ஸ்ரீநகரிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலாகும் இது.
பிரியங்கா வருகை குறித்து கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அவர் வந்ததும், கோவில் அமைந்துள்ள துல்லமுல்லா நகரில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி வாகனங்கள் அங்கிருந்து வெளியேறவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்காவின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருநத்தாக கூறப்படுகிறது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்குக் கூட பிரியங்காவின் வருகை குறித்து தெரிவிக்கப்படவில்லையாம்.
கோவிலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தார் பிரியங்கா. பின்னர் ஸ்ரீநகர் திரும்பி அங்கிருந்து தனிப்பட்ட விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
காஷ்மீர் பண்டிட் சமுதாயத்தினரின் முக்கியக் கோவில்தான் இந்த கீர் பவானி கோவிலாகும். பிரியங்காவின் கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் பண்டிட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர் பவானி கோவிலுக்கு வந்த பிரியங்கா, ஸ்ரீநகர், நிஷாத் பகுதியில் உள்ள சுவாமி லக்ஸ்மஞ்சு ஆசிரமத்திற்கும் சென்றார்.
மறைந்த சுவாமி லக்ஸ்மஞ்சுவின் தீவிர பக்தையாக இருந்தவர் இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications