பேரா. கல்பர்கி படுகொலை- ஸ்ரீராம் சேனா நிர்வாகியிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை!
பெங்களூர்: வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளால் பேராசிரியர் கல்பர்கி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது ஸ்ரீராம் சேனாவின் முக்கிய நிர்வாகி பிரசாத் அட்டவாரிடம் போலீஸ் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் மூத்த சிந்தனையாளரான பகுத்தறிவாளர் பேராசிரியர் கல்பக்ரியை வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். கர்நாடகாவை மட்டுமல்ல இந்தியாவையே இந்த படுகொலை உலுக்கியுள்ளது. இந்த படுகொலை தொடர்பாக தார்வாட் போலீசார் ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி பிரசாத் அட்டவாரை வளைத்துப் பிடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்பர்கி படுகொலை நியாயப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட மங்களூரைச் சேர்ந்த இந்துத்துவா தீவிரவாதி புவித் ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். தமது ட்விட்டர் பக்கத்தில், பேராசிரியர் பகவானுக்கு அடுத்த குறி என்றும் கொலை மிரட்டல் விடுத்திருந்ததால் கைது செய்யப்பட்ட ஷெட்டிக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
அத்துடன் கல்பர்கி படுகொலையில் ஷெட்டிக்கு தொடர்பும் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில்தான் சிக்கியிருக்கும் ஸ்ரீராம் சேனாவின் பிரசாத்திடம் கல்பர்கி படுகொலையை நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தது ஏன்? கொலையில் நேரடி தொடர்பிருக்கிறதா? என்பது குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications