ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்
அமிர்தசரஸ்: தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கு பதில் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி கொடும்பாவியை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காக பல அடி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை தீ வைத்து எரிப்பர்.

இந்த ஆண்டு பஞ்சாப்பில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்கு பதிலாக பாரதீய கிஸான் யூனியன் (Ugrahan) விவசாயிகள் அமைப்பு நூதன முறையை கடைபிடித்தனர். மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் பல அடி உயர கொடும்பாவியை தயார் செய்தனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களால் தொழிலதிபர்கள் அதானி, அம்பானிதான் பயனடைகின்றனர் என்பதை குறிக்கும் வகையில் அவர்களது படங்களும் இந்த கொடும்பாவில் சேர்க்கப்பட்டன. பின்னர் தசாரா பண்டிகை நிகழ்ச்சியில் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகள் ஒருசேர கொளுத்தப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் இதேபோல் கொடும்பாவிகளை விவசாயிகள் கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications