தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றுவோம் என்கிறது பாஜக!
டெல்லி: தலித்துகள் பெற்று வரும் இடஒதுக்கீடு முறையில் வருமான உச்சவரம்பு கொண்டு வந்து மாற்றி அமைப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சஞ்சய் பாஸ்வான் கூறியுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் கடந்த 60 ஆண்டுகாலம் தலித் மக்கள் பெற்றது என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். இதன் மூலம் எப்படியெல்லாம் சில குடும்பங்கள் மட்டும் பயனடைந்து மற்றவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.
தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் பாஜக ஏற்கிறது. இடஒதுக்கீடு மூலம் பணி பெற்று ரூ1 லட்சம் மாத வருமானம் பெறும் தலித் குடும்பங்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவது அவசியமானதாகும்.
குறிப்பாக முதல் நிலை, இரண்டாம் நிலையில் பணியாற்றும் தலித் அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நான் தொழில்முறையில் என்ஜினியர், ஒரு எம்.பி. பிறகு எதற்கு என் மகன்களுக்கு இடஒதுக்கீடு அவசியமாகிறது?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு மூலம் பாரதிய ஜனதா ஆட்சியில் அமைந்தால் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை மாற்றி அமைப்பது தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் உருவாகியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications