பரபரப்பான நிலையில் கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராகும் ஆர்.வி.தேஷ்பாண்டே.. யார் இவர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும்- எடியூரப்பா- வீடியோ

  பெங்களூர்: கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

  R V Deshpande to be pro-tem Speaker in Karnataka Legislative Assembly

  பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

  இந்த நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்டி பாஜக கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பாஜக கட்சிக்கு தற்போது 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருக்கிறார்கள். இதனால் பெரிய பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  இவர் ஹாலியால் தொகுதியில் இருந்து இவர் 8 முறை சட்டசபை உறுப்பினராக காங்கிரஸ் கட்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சட்டசபையில் இவர்தான் மிகவும் அனுபவமிக்க நபர் என்பதால் பாஜக அரசு இவர் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன் வேறு ஒரு நிரந்தர சபாநாயகர் பாஜக கட்சியினரால் அறிவிக்கப்படலாம், ஆனால் அதற்கு தனியாக வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதுவரை இவர்தான் சபாநாயகராக செயல்படுவார். ஆனால் இவருக்கு சபாநாயகருக்கு இருக்கும் எல்லா அதிகாரமும் இருக்காது பாதிதான் இருக்கும், எம்எல்ஏக்கள் பதவி ஏற்க மட்டுமே இவர் பயன்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

  அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், இவருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் வழங்கப்படும். வாக்கெடுப்பின் போது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்க தகுதி இருக்கிறதோ அதே தகுதி இவருக்கும் இருக்கும். இவரது பெயர் ஆளுநரிடம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The legislature secretariat has recommended the name of R V Deshpande as pro-tem speaker of the Karnataka Legislative Assembly. The name of Deshpande, a Congress MLA was recommend after taking into consideration that he is the senior most member of the House.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற