அப்படி என்ன சாதித்தார் ரகுராம் ராஜன்... இதைப் படியுங்க...
Subscribe to Oneindia Tamil
மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தமக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரகுராம் ராஜன் போனால் போகட்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரிகள் கூச்சலிடுகிறார்கள்... ஆனால் ரகுராம் ராஜன் போய்விட்டால் இந்தியாவின் எதிர்கால "இருட்டு" குறித்து பெரிதும் கவலை கொள்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

அப்படி என்னதான் செய்தார் ரகுராம் ராஜன்?
2013-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்ற போது நாட்டின் நிலைமை இதுதான்..
- நாட்டின் பொருளாதாரம் தத்தளித்தது
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது.
- நாட்டின் பணவீக்கம் 10%-க்கு மேல் அதிகரித்திருந்தது.
- அந்நிய முதலீடுகள் வேகமாக வெளியேறின.
ரகுராம் ராஜன் பதவியேற்ற பின்னர்....
- அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டது
- சில மாதங்களிலேயே 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு இந்தியாவுக்கு வந்தது.
- நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகாமல் தடுக்கப்பட்டது.
- இதற்காகவே ஊடகங்கள் "ராஜன் எபெக்ட்" என புகழாரம் சூட்டின.
- 10% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆகக் குறைக்கப்பட்டது.
- சிறு வங்கிகளுக்கான உரிமங்களை அதிகப்படுத்தினார்.
- வாரா கடன்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார்
- வங்கிகள் தங்களது நட்டங்களை பதிவு செய்தது
- வங்கிகள் தங்களது வாரா கடன்களை வசூலித்து நிதிநிலவரத்தை சரி செய்ய கெடு வைத்தார்.
- கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார்.
- நாட்டின் சகிப்பின்மை தன்மை வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தார்.
ரகுராம் ராஜனுக்குப் பின்னர் என்னவாகும்?
- உலகமே பொருளாதார மந்த நிலையை நோக்கி நகரும்போது இந்தியாவும் தப்பாது
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும்.
- வாரா கடன்களை வசூலித்தல் உள்ளிட்ட ராஜன் நடவடிக்கைகள் அப்படியே நிறுத்தப்படும்
- இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மேலும் படுமோசமாகும் அபாயம்
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications