மகன் காரோட்ட.. ஊரெல்லாம் பூமழை தூவ.. உற்சாகமாக ரேபரேலியில் உலா வந்த சோனியா!

Subscribe to Oneindia Tamil

ரேபரேலி: மகன் ராகுல காந்தி காரை ஓட்டிக் கொண்டு வர, அருகே அமர்ந்தபடி, ஊரெல்லாம் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பில் பூரித்தபடி, ரேபரேலி தொகுயில் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு ரேபரேலியில் குட்டியாக ஒரு நகர் வலமே வந்து விட்டார் சோனியா காந்தி. வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் கூட அவரை பிரமாதமாக வரவேற்றனர்.

பலர் காரில் ரோஜாப் பூக்களைத் தூவி வரவேற்றபோது சோனியா முகத்தில் பெருமிதம் கலந்த உற்சாகம். முன்பு மாமியார் இந்திரா காந்தி நின்று வென்ற ரேபரேலியில் தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார் சோனியா காந்தி.

காரோட்டி ராகுல்

காரோட்டி ராகுல்

இன்று காலை ரேபரேலிக்கு வந்த சோனியா காந்தியை தானே காரில் ஏற்றி காரையும் ஓட்டி வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அழைத்து வந்தார் ராகுல் காந்தி.

பூமழை தூவி

பூமழை தூவி

வரும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு. ஆயிரக்ணக்கானோர் கூடி சோனியாவை வாழ்த்தி வரவேற்றனர். பூமழை பொழிய வரவேற்றதை காங்கிரஸாரே வித்தியாசமாக பார்த்தனர்.

2004 முதல்

2004 முதல்

2004 தேர்தலில்தான் ரேபரேலிக்கு மாறினார் சோனியா காந்தி. பிறகு 2009 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டார். இப்போது 3வது முறையாக களம் காண்கிறார்.

6வது முறையாக

6வது முறையாக

ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில், தற்போது 6வது முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் சோனியா காந்தி.

பெல்லாரி - அமேதி

பெல்லாரி - அமேதி

1999ம் ஆண்டுதான் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் சோனியா காந்தி. அப்போது கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் உ.பியின் அமேதி தொகுதியில் அவர் போட்டியிட்டார். இரண்டிலும் அபார வெற்றி பெற்றார். பின்னர் பெல்லாரியில் ராஜினாமா செய்தார்.

குடும்பத் தொகுதிகள்

குடும்பத் தொகுதிகள்

காங்கிரஸ் கட்சியில் அமேதியும், ரேபரேலியும் பாரம்பரியமான காந்தி குடுமபத்துத் தொகுதிகள் ஆகும்.

சஞ்சய், ராகுல் வென்ற அமேதி

சஞ்சய், ராகுல் வென்ற அமேதி

இந்திரா காந்தியின் புதல்வர்களான சஞ்சய் காந்தியும், ராகுல் காந்தியும் வென்ற தொகுதி அமேதி. இங்கு சஞ்சய் காந்தி ஒருமுறை எம்.பியாக இருந்துள்ளார். ஆனால் ராகுல காந்தி, 4 முறை வென்றுள்ளார். தற்போது கடந்த 2 தேர்தல்களாக இங்கு ராகுல் காந்தி வென்று வருகிறார். தற்போது 3வது முறையாக அவர் இங்கு போட்டியிடவுள்ளார்.

ரேபரேலி.. பெரோஸ் முதல் சோனியா காந்தி வரை

ரேபரேலி.. பெரோஸ் முதல் சோனியா காந்தி வரை

ரேபரேலி தொகுதியானது முற்றிலும் இந்திரா குடும்பத்துத் தொகுதியாகவே மாறிப் போய் விட்டது. இங்கு 1951ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் பெரோஸ் காந்தி வென்றார். இவர் இந்திரா காந்தியின் கணவர். பின்னர் 57 தேர்தலிலும் பெரோஸே வென்றார்.

3 முறை இந்திரா

3 முறை இந்திரா

1967 தேர்தலில் இந்திரா இங்கு நின்று வென்றார். பின்னர் 71 தேர்தலிலும் வென்றார். ஆனால், 77தேர்தலில் ஜனதாவின் ராஜ் நாராயணனிடம் தோற்றார். ஆனால் 80 தேர்தலில் மீண்டும் வென்றார் இந்திரா.

2004 முதல் சோனியா வசம்

2004 முதல் சோனியா வசம்

அதன் பின்னர் 2004 வரை நேரு - இந்திரா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்தது ரேபரேலி. 2004 முதல் இங்கு சோனியா வென்று வருகிறார்.

அலி மியான் பிறப்பிடத்திற்குப் போகும் சோனியா

அலி மியான் பிறப்பிடத்திற்குப் போகும் சோனியா

வேட்பு மனுத் தாக்கலை முடித்துள்ள சோனியா காந்தி, முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் தலைவராக இருந்த அலி மியானின் பிறப்பிடம் அமைந்துள்ள தாக்கியா கிராமத்திற்குப் போகிறார். அங்கு வழிபடுகிறார்.

காப்பாளர் மகள்

காப்பாளர் மகள்

ரேபரேலியி தொகுதியில் சோனியா வென்று வரும் போதிலும் இந்தத் தொகுதியை முழுமையாக கவனித்துக் கொள்வது அவரது மகள் பிரியங்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+