Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேசாமலே 11 ஆண்டு தவம்.. ராகுல் தேடிச்சென்ற அதிசய பாபா.. யார் இவர்? கேதார்நாத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: ராகுல் காந்தி கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்த நிலையில் கருப்பு நிற உடை அணிந்து நெற்றியில் திருநீர், சந்தனம் வைத்து கருப்பு நிற உடை அணிந்து அதிசய பாபா ஒருவரை சந்தித்து ஆசி பெற்ற வீடியோ வெளியான நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளன. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஆன்மிக தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Rahul Gandhi Meets with Mouni Baba at Kedarnath in UttarKhand

இமயமலையின் அழகை ரசித்தபடி அங்கு சாமி தரிசனம் செய்யலாம். இங்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்றார். அங்குள்ள கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் ராகுல் காந்தி அங்கு தனது தம்பியான பாஜக எம்பி வருண் காந்தி மற்றும் அவரது மகளை சந்தித்து உரையாடினார்.

மேலும் கேதார்நாத்தில் ராகுல் காந்தி அங்குள்ள சாமியார்கள் மற்றும் ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ராகுல் காந்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛பயம் என்பது மனதின் மாயை.. கேதார்நாத்தில் உள்ள 'மவுனி' பாபாவிடமிருந்து 'பயப்படாதே' என்பதன் ரகசியத்தையும், அவருடைய பல வருட தவம் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் அவர் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் ‛மவுனி' பாபாவுடனான சந்திப்பு பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மவுனி பாபா என்பவர் சிவனை நினைத்து தவம் புரிந்து வருபவர்கள். பொதுவாக சிவனடியார்கள் தங்களின் உடலை வருத்தி பல ஆண்டுகள் தவம் புரிவது வழக்கம். அந்த வகையில் மவுனி பாபா கடந்த 11 ஆண்டுகளாக யாரிடமும் பேசாமல் தவம் புரிந்து வருகிறார். இவரிடம் தான் ராகுல் காந்தி ஆசி பெற்றுள்ளார்.

இந்த சமயத்தில் ராகுல் காந்தி கருப்பு நிற உடை அணிந்துள்ளார். நெற்றியில் திருநீர், சந்தனம் உள்ளது. ராகுல் காந்தி சென்றவுடன் ‛மவுனி' பாபா அவரை வரவேற்று தனது அருகில் அமர வைத்தார். அதன்பிறகு ராகுல் காந்தி அவர் குறித்தும், அவரது தவம் குறித்தும் கேட்டார். அதற்கு ‛மவுனி' பாபா நோட் ஒன்றில் எழுதி பதிலளித்தார். அதன்பிறகு அவர் மவுனி பாபா தரப்பில் சுடச்சுட சப்பாத்தி தயாரித்து பிரசாதமாக ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. அதனை ராகுல் காந்தி சாப்பிட்டார்.

முன்னதாக ‛மவுனி' பாபா உடனான சந்திப்பின்போது ராகுல் காந்தி தனது செல்போனில் இருந்து தங்கை பிரியங்கா காந்திக்கு வீடியோ கால் செய்தார். இதையடுத்து பிரியங்கா காந்தியும், ‛மவுனி' பாபாவிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
*****

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+