பாஜகவுக்கு பதிலடியாக ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட ”நாய் வீடியோ”- சோசியல் மீடியாவில் வைரல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட நாய் வீடியோ ஒன்று அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகிவிட்டது. சமூக வலைதளங்களிலும் வைரலாக அந்த வீடியோ பரவி வருகிறது.

ராகுல் காந்திக்காக ட்விட்டரில் யாரோ கருத்துகளை பதிவிடுகின்றனர்; அவரது சொந்த கருத்தே அல்ல என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

Rahul Gandhi's tweet on pet dog goes viral

இதற்கு பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். சில விநாடிகள் ஓடக் கூடிய வீடியோவையும் அதில் இணைத்திருந்தார். அந்த வீடியோ பதிவில் குட்டி நாயிடம் நமஸ்தே சொல்லுமாறு ராகுல் கூறும் காட்சி இடம்பெற்றிருந்தது.

மேலும் அந்த வீடியோவுடன், யார் இவருக்காக ட்விட்டரில் போடுகிறார்கள் என கேட்கிறார்கள்... இப்போது நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன், அது நான் தான்... பிடியை (செல்ல நாய்) விட நான் திறமைசாலி. என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பாருங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் பாஜகவினர் இதை முன்வைத்து விமர்சிக்கவும் தொடங்கி உள்ளனர். இதற்கு காங்கிரசார் பதிலடி தருவதால் ட்விட்டர் பக்கங்கள் யுத்த களமாகிக் கிடக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress vice president Rahul Gandhi on Sunday posted a video of his pet dog on Twitter. Rahul Gandhi's this video went on viral in social medias.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற