For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பெரும்பணக்காரர்களுக்கு காவலராக இருக்கும் மோடி தான் சிக்கிக் கொண்டதும் நாட்டு மக்கள் அனைவரையுமே காவலர்களாக மாற்ற முயற்சிக்கிறார் என்று ராகுல் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார்.

சில தினங்களுக்கு முன்னர் நான் இந்த நாட்டின் காவலர் என்ற பொருளில் தனது டிவிட்டர் அக்கவுண்டை சவுகிதார் நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்தார். அதாவது கடந்த மக்களவை தேர்தலின்போதே பாஜகவும் மோடியும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் இந்நாட்டின் காவலர் மோடி ஒரு திருடன் என்று ராகுல் காந்தி மோடியை விமர்சித்திருந்தார். ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது.

Rahul Gandhi slams Modi for Twitter name change

இதனால் கோபமடைந்த பாஜக இந்த காவலர் மேட்டரையே இந்த தேர்தலில் பரப்புரையாக்க திட்டமிட்டது. அதன்படி ட்விட்டரில் பதிவிட்ட மோடி உங்களுடைய பாதுகாவலனாகிய நான் உறுதியாக நின்று நாட்டுக்கு சேவை புரிந்து வருகிறேன். ஆனால் ஊழலுக்கு எதிராகவும், தீய செயல்களுக்கு எதிராக போராடும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களது டிவிட்டர் அக்கவுண்ட் பெயரை சவ்கிதார் மோடி என்று மாற்றினர். நம்மூர் தலைவர் தமிழிசை உட்பட இவ்வாறு மாற்றி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் கடந்த இரு நாட்களாக தானும் ஒரு காவலர் என்று மோடி பதிவிட்டு வருகிறார்.

ரஃபேல் விமான ஊழலில் தான் சிக்கிக் கொண்டதும் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் இதில் இழுத்து விட பார்க்கிறார். ரஃபேல் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்தவர் இந்த தேசத்தையே காவலராக மாற்ற முயற்சிக்கிறார். இந்த நாட்டு மக்கள் தன்னை பிரதமராக்கவில்லை ஒரு காவலர் ஆக்கியுள்ளார்கள் என்று இதுவரை கூறிவந்தவர், இதுவரை தேசத்தை காவலாளியாக்க போகிறேன் என்று கூறாதவர் இப்போது தேசத்தை காவலாளி ஆக்கியுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீங்கியது.. வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமிஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீங்கியது.. வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமி

அனில் அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய பெரும் தொழிலதிபர்களுக்கு பாதுகாவலராக இருந்த மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்த நாட்டு மக்களை சிரமப் படுத்தியவர் அரசியல் அமைப்பு சட்டத்தையே மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்ற முயற்சிக்கிறது. ரஃபேல் போர் விமான பேரத்தில் தான் சிக்கிக் கொண்டதையடுத்து அனிலுக்கும், நீரவ் மோடிக்கும், மெகுல் சோக்சிக்கும் காவலராக இருந்தவர் இப்போது நாட்டையே காவலாளியாக்கி விட்டார் என்று ராகுல் மோடியை தேர்தல் பிரச்சாரத்தின்போது வறுத்தெடுத்துள்ளார்.

மோடியின் காவலாளி பிரச்சாரம் குறித்து பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளார். உ.பி மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மோடி தன்னை காவலாளி என்று அழைப்பது அவரது தனிப்பட்ட விருப்பம் ஆனால் இது குறித்து தன்னிடம் பேசிய விவசாயி ஒருவர் காவலாளிகள் பணக்காரர்களுக்குத்தான் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இல்லை. எங்களை நாங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக பிரியங்காவும் மோடியை விமர்சித்துள்ளார்.

ஆக கடந்த முறை சமூக வலைத்தளங்கள் மூலம் தனது பிரச்சாரத்தை வலுப்படுத்தி ஆட்சியை பிடித்த பாஜகவுக்கு இம்முறை அதே வலை தளங்களே பூமராங் ஆகியிருப்பது பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது.

English summary
Congress president Rahul Gandhi has slammed PM Narendra Modi for his name change in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X