For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி ஏழைகளை கண்டு கொள்வதில்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

அமேதி: பிரதமர் மோடி ஏழைகளை கண்டுகொள்வதில்லை என்றும் அவரது வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அவரது மக்களவை தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு நியாயா பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அங்குள்ளவர்கள் மிகுந்த புத்திசாலிகள். அவரது பயணத்தால் இந்தியாவுக்கு எந்த பலனும் இல்லை. சராசரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

Rahul gandhi visit Amethi constituency

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு பா.ஜ.க. கூட்டணி அரசின் தவறான நிர்வாகம்தான் காரணம். பிரதமர் மோடி ஏழைகளை கண்டு கொள்வதில்லை இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்து முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசினார். பீகார் தேர்தல் முடிவுக்குப்பின், அந்த மாநிலம் இருப்பதையே அவர் மறந்து விட்டார். நல்ல நாட்கள் பிரதமர் மோடிக்கு தான் வந்துள்ளதே தவிர நாட்டு மக்களுக்கு வரவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

English summary
Congress vice president Rahul Gandhi on Wednesday visit to his parliamentary constituency, Amethi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X