ஆசையாக இருந்தாரே.. விஜயின் கனவை ஒரே அடியாக கலைத்துப்போட்ட ஸ்டாலின் - ராகுல்.. மொத்தமாக போச்சே

Subscribe to Oneindia Tamil

பீகார்: பீகாரில் இன்று நடந்த வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து இந்த பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்க்கு இது பெரிய ஏமாற்றமாக மாறி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் தாராக வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

congress

அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி பேரணி

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் பேரணியை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பீகாரில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.

இதில், மக்களிடம் இருந்து வாக்குரிமையை பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா' கூட்டணிக்கான அடித்தளத்தை இங்குள்ள பாட்னாவில் தான் விதைத்தோம். 400 இடங்கள் என்று கனவு கண்டவர்களை 240 இடங்களில் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள் மைனாரிட்டி ஆக்கிவிட்டார்கள். மக்கள் சக்தி முன்பு எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும். ராகுல் காந்தி இன்று இந்தியாவுக்கான வழக்கறிஞராக இருக்கிறார். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்'' என பீகார் யாத்திரையில் ஸ்டாலின் பேசினார்.

விஜய்க்கு ஏமாற்றம்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்க்கு இது பெரிய ஏமாற்றமாக மாறி உள்ளது. கடந்த 2 நாட்களாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. தவெக கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களை கொடுக்க முன் வந்ததாக செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் தவெக விஜய் முன்வந்ததாக செய்திகள் வந்தன.

ஆனால் 70 சீட்-துணை முதல்வர் பதவி என்பது தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்ட செய்தி என்று கூறப்படுகிறது. தவெக மாநாடு நிறைய எதிர்வினை விமர்சனங்களை சந்தித்ததால், விஜயின் "அங்கிள்" பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், இந்த செய்தியை தவெகவின் சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஜய் விமர்சனம்

விஜய் - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொய்யான செய்திகள் வெளியான நிலையில்தான் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை பேசி உள்ளார். அதில், நடிகர் விஜய் மேடையில் கண்ணியமாகப் பேச வேண்டும். விஜயகாந்த் கட்சி தொடங்கி கணிசமான வாக்குகளைப் பெற்றார். 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சியின் இப்போதைய நிலை என்ன? விஜய் கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும்.

இதுபோல பல கட்சிகள் வரும், போகும். காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் கொள்கை பலம்தான். காங்கிரஸ் யானை பலம் கொண்ட கட்சி. எங்கள் அரசியல் எதிரிகள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவாக இருந்தாலும், நாங்கள் அவர்களை நாகரிகமான முறையில் பேசுகிறோம். விஜய் அது போல நாகரீகமாக பேச வேண்டும். நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்க ஏற்பாடு செய்த மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். முடிவில், காங்கிரஸ் கூட அந்தக் கட்சியில் இணைந்தது. ஆனால் தற்போது அந்தக் கட்சி இல்லை, என்று கூறி உள்ளார்.

காங்கிரஸ் - தவெக விஜய் மீட்டிங்

முன்னதாக காங்கிரஸ் - விஜய் பேச்சுவார்த்தை என்று தவெக சார்பாக வியூக வகுப்பாளர் ஒருவர் கிளப்பிவிட்ட செய்தியை காங்கிரஸ் - திமுக வட்டாரங்கள் மறுக்கிறார்கள். முக்கியமாக சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் விஜயை சந்திக்க ராகுல் காந்தி தரப்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜயின் இந்த முயற்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவது குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அவ்வாறு நேரம் ஒதுக்கினால் அது தவறான சமிக்ஞையை அளிக்கும் என்பதால் ராகுல் காந்தி விஜயைச் சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய கட்சிகள்கூட விஜயுடன் கூட்டணி வைக்கத் தயங்கும் நிலையில், காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சி விஜயைச் சந்திப்பது சரியானதல்ல என்று ராகுல் காந்தி - சோனியா காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+