"ராமரின் பாத யாத்திரையை விட ராகுலின் பாரத் ஜோடா யாத்திரை பெரியது" - காங்கிரஸ் அமைச்சர் பரபர
ஜெய்பூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தனித்துவமும் வரலாற்று சிறப்பும் வாய்ந்தது என்றும், ராமரின் பாத யாத்திரையை விட ராகுலின் பாத யாத்திரை பெரியது என்றும் ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சதி லால் மீனா கூறியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணமாக ராகுல் காந்தி செல்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் மொத்தம் ராகுல் காந்தி 3,500 கி.மீட்டர் நடக்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்லும் வகையில் ராகுலின் மொத்த பாத யாத்திரை பயண திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பாரத் ஜோடா யாத்திரை
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுலின் இந்த பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக தற்போது ஆந்திராவிற்கு ராகுல் காந்தி நடைபயணமாக சென்றுள்ளார். அங்கு 2-வது நாளாக ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாத யாத்திரை கட்சியை அடிமட்ட அளவில் வளர்ச்சி அடைய வைக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ராமரின் யாத்திரையை விட பெரியது
சமீபத்திய தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தவும் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தோடும் ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையை மேற்கொண்டு இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். ராகுலின் பாத யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சதி லல் மீனா, ராமரின் பாத யாத்திரையோடு ஒப்பிட்டு பேசி விவாதத்தை கிளப்பி விட்டு இருக்கிறார்.

கடவுள் ராமர் கூட அயோத்தியில் இருந்து
இது தொடர்பாக பர்சதி லால் மீனா கூறியதாவது:- கடவுள் ராமர் கூட அயோத்தியில் இருந்து இலங்கைக்கு பாத யாத்திரையாக சென்றார். ஆனால் இப்போது ராகுல் காந்தி அதை விட கூடுதலாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்கிறார். நாட்டின் அமைதியான சூழலை பாஜக சீர்குலைத்து விட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுத்து நாட்டின் சூழலை மேம்படுத்தவே ராகுல் காந்தி பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

யாரும் இனி மேற்கொள்ள முடியாது
இதுபோன்ற ஒரு யாத்திரையை யாரும் இதுவரை பார்த்தது இல்லை. இப்படி ஒரு பாத யாத்திரையை யாரும் இனி மேற்கொள்ளவும் முடியாது'' என்றார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தனித்துவமும் வரலாற்று சிறப்பும் வாய்ந்தது என்றும், ராமரின் பாத யாத்திரையை விட ராகுலின் பாத யாத்திரை பெரியது என்றும் ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் பர்சதி லால் மீனா கூறியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ராமரின் யாத்திரையை ஒப்பிட்டு
காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், மல்லிகார்ஜூன கார்கே உள்பட பலரும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடா யாத்திரையை புகழ்ந்து பேசி வரும் நிலையில், ராஜஸ்தான் அமைச்சர் பர்சதி லால் மீனா ஒருபடி மேலே சென்று ராமரின் யாத்திரையை ஒப்பிட்டு பேசியிருப்பது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த பேச்சை பாஜக கடுமையாக கண்டித்துள்ளது.

பாஜக எம்.எல்.ஏ. பதில்
இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளரும் எம்.எல்.ஏ.வுமான ரம்லால் ஷர்மா இது குறித்து கூறியதாவது:- ''கடவுள் ராமர் இருப்பதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் தற்போது இப்படி பேசுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பிடிப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அதிகப்படியான முகஸ்துதி பாடுகின்றனர். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். சரியான நேரத்தில் உரிய பதிலடி கிடைக்கும்'' என்றார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications