ஊடகங்களில் ரயில்வே பட்ஜெட் 'லீக்' ஆனது துரதிருஷ்டவசமானது: ராஜ்யசபா தலைவர்
டெல்லி: ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பாக வெளியில் கசிந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு எதிரான உரிமை மீறல் பிரச்சினையை தள்ளுபடி செய்த ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி, இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை, ரயில்வே பட்ஜெட், அத்துறை அமைச்சர் சதானந்தகவுடாவால் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து ஏற்கனவே தகவல் வெளியே கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரயில்வே பட்ஜெட் அம்சங்கள், ஏற்கனவே வெளியாகிவிட்டதாக குற்றம்சாட்டி, புதன்கிழமை, ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களது கைகளில் பட்ஜெட்டுக்கு முந்தைய நாள், பட்ஜெட் அம்சங்கள் குறித்து வெளியான செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் துண்டு காகிதங்கள் இருந்தன.

மேலும், சதானந்தகவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவர அனுமதி கோரி ராஜ்யசபா தலைவரிடமும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இக்கோரிக்கை மீது பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதாக ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்திருந்தார்.
புகாரை ஆய்வு செய்த பிறகு, இன்று ராஜ்யசபாவில் ஹமீத் அன்சாரி இதுகுறித்து கூறுகையில், "பட்ஜெட் அம்சங்கள் வெளியே கசிந்தது துரதிருஷ்டவசமானது. அலுவல் ரகசியம் காக்கப்படவில்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதை அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
இதற்கு முந்தைய ஆட்சிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தபோது அமைச்சர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சதானந்தகவுடாவுக்கு எதிரான உரிமை மீறல் பிரச்சினையை தள்ளுபடி செய்கிறேன்" என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications