சபரிமலை சீசனுக்கு இந்தாண்டு 294 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு
திருவனந்தபுரம்: இந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 294 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
சபரிமலை சீசனையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் சுனில் பாஜ்பாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சபரிமலை சீசனுக்கு 294 சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், பயணிகள் வருகையைப் பொருத்து தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டதாக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்படும் ரயில்களில் 3700 படுக்கை வசதிளுடன் கூடுதல் பெட்டிகளை சேர்த்திருப்பதாகவும், கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மகரவிளக்கு நாள் நெருங்கும்போது முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதவிர பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள், பிரீ-பெய்டு ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications