ஒடிசா ரயில் விபத்து.. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா? மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில் மீது பெங்களூர்-ஹவுரா மற்றும் ஒரு சரக்கு ரயில் அடுத்தடுத்து மோதின. தற்போது வரை 70 பேர் பலியாகி உள்ள நிலையில் 350க்கும் அதிகமானவர்கள் காயடைமந்துள்ளனர். இந்நிலையில் தான் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி இன்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தார். ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இன்று இரவு 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம்புரண்ட இடம் வனப்பகுதியாகும்.

இதையடுத்து அந்த வழியாக வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மொத்தம் 70 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பலியானோரின் விபரங்களை வெளியாகவில்லை. மேலும் 350க்கும் அதிகமானவர்கள் காயம்டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார். மேலும் ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் அஸ்வினி வைஷ்ணவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான பினோம் விஸ்வம் கூறியுள்ளார். இதுபற்றி அவர்த தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ மத்திய அரசு சொகுசு வகை ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மாறாக சாதாரண மக்களுக்கான ரயில் மற்றும் தண்டவாளங்கள் கவனிப்பதில் அலட்சியம் காட்டுகிறது. இதற்கு ஒடிசா ரயில் விபத்தை சாட்சி. இதனால் மத்திய ரயில்வே அமைச்சர் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications