தமிழ்நாட்டில் தொடரும் மழை; இன்னொரு புயல் உருவாகிறதா?
மேண்டோஸ் புயல் தமிழ்நாட்டைக் கடந்து சென்றுவிட்ட போதிலும் தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவிலிருந்தே மழை நீடித்து வருகிறது. பல மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நெருங்கிவந்த மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்தது.
அதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கடந்த சென்றதால், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவந்தது.
தற்போது மாண்டஸ் புயல் எச்சம் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமையன்று தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி - மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவிலிருந்து மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது.
தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அங்கு பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் மதியம் 3 மணியோடு வகுப்புகள் முடித்துக்கொள்ளப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல்பகுதியின் கிழக்குப் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, நாளை அந்தமான் கடலின் தெற்குப் பகுதியில் நிலவக்கூடும். தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கும் காலகட்டமான அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 401 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இந்த காலகட்டத்திற்கான இயல்பான அளவு. சென்னையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தற்கான இயல்பான அளவு 736 மி.மீ. ஆனால், தற்போது 856 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் அதிகம்.
மேண்டோஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, டிசம்பர் 9ஆம் தேதிவரை சென்னையில் இயல்பான மழையைவிட 1 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 9ஆம் தேதிக்கு முன்பு இயல்பைவிட 4 சதவீதம் அதிக மழை பெய்திருந்தது. தற்போது இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக உள்ளது. ராணிப்பேட்டையில் 19 சதவீதம் குறைவாக பதிவாகியிருந்த மழை, புயலுக்குப் பின்பு 10 சதவீதம் அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரிலும் திருவள்ளூரிலும் 9 செ.மி. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
லட்சத் தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதைத் தவிர, அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலையில் எந்த முக்கிய நிகழ்வும் இல்லை.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 3,400 கன அடியைத் தாண்டியுள்ள நிலையில், நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மதுரவாயல் - நொளம்பூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பூண்டி ஏரியும் நிரம்பிவருவதால், அதிலிருந்து திறக்கப்படும் நீரால், திருவள்ளூர் மாவட்டம் ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்















Click it and Unblock the Notifications