திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்.. தவித்த பக்தர்கள் - வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தண்ணீர் புகுந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் நீரை பம்ப்செட் மூலம் வெளியேற்றினர்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாது ஆந்திர பிரதேசத்திலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. அதனால், கோயிலின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கோவில் பிரகாரத்தில் தண்ணீர் தேங்கி நின்ற காரணத்தால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கபப்ட்ட அங்கு வந்த அவர்கள் பம்ப் செட் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதனால் ஏழுமையான் கோவிலில் இயல்பான நடைமுறைகள் பாதிப்புக்குள்ளாகின. தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் மழை நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications