வெடித்தது பூகம்பம்! மேற்கு வங்க ஆளுநர் மீது ராஜ் பவன் பெண் ஊழியர் பாலியல் புகார்!
கொல்கத்தா: கொல்கத்தா ராஜ்பவனில் பணிபுரியும் பெண் ஒருவர் மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1977 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவி ஆனந்த போஸ், மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஆனந்த போஸ் கடந்த நவம்பர் 23, 2022 முதல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக, கொல்கத்தா ராஜ் பவனில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளரான பெண் ஒருவர், ஆளுநர் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரியை அணுகி, ஆளுநர் ஆனந்த போஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, அதிகாரி உடனடியாக ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்க, ஹரே ஸ்ட்ரீட் போலீசார் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வரவில்லை.
இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் உள்ள ராஜ் பவனில் இன்று இரவு தங்க இருக்கிறார். இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்











Click it and Unblock the Notifications