கொடுமை! பள்ளி மாடியிலிருந்து குதித்த 4ம் வகுப்பு சிறுமி.. துடிதுடித்து மரணம்! ஆதாரத்தை அழித்த பள்ளி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியின் 4வது மாடியில் இருந்து 9 வயதுக் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளது. அந்தக் குழந்தை நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தக் காலத்தில் குழந்தைகள் நொடிகளில் எடுக்கக்கூடாத முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து நடந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் பள்ளி
ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது அமய்ரா என்ற சிறுமி, பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நவம்பர் 1ஆம் தேதி நடந்துள்ளது. அங்குள்ள மன்சரோவர் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் பிற்பகல் 1:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுமார் 10 வினாடிகள் ஓடும் சிசிடிவி காட்சிகளில், அமய்ரா முதலில் தடுப்புச்சுவர் மீது ஏறுகிறார். ஓரிரு நொடிகள் அங்கு அமர்ந்திருக்கும் சிறுமி பிறகு கீழே குதிப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. கீழே சில செடிகள் இருந்த நிலையில், அதில் சிறுமி விழுந்திருக்கிறார். அவரது தலை அங்குள்ள சுவரில் மோதியுள்ளது.
மருத்துவர்கள்
இதையடுத்து பள்ளியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், "அந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, சுவாசம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. குழந்தையின் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது" என்றார்.
அக்குழந்தை சுமார் 47 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளது.. அதில் குழந்தையின் விலா எலும்புகள் உடைந்து உள் உறுப்புகளைத் தாக்கியதால், உடல் முழுவதும் காற்று நிரம்பி வீங்கியிருந்தது. தலையில் மிக மோசமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கும் இருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.
ஆதாரம் அழிப்பு?
குழந்தை குதித்தாக தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும், ரத்தக் கறை உட்பட எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை.. பள்ளி நிர்வாகம் ஆதாரங்களை அழித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தை விழுந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகளைப் பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் ஆதாரங்களைப் பாதுகாப்பது சட்டப்படி அவசியம்.. இருப்பினும், பள்ள நிர்வாகம் அவற்றை அழித்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனர்..
புகார்
இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்படி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்குழந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தை குற்றச்சாட்டு
இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது குழந்தையின் தந்தை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சம்பவ இடத்தையும் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது குழந்தை பள்ளிக்குச் சென்றபோது நார்மலாகவே இருந்தார். திடீரென ஏன் இப்படிச் செய்தார் எனப் புரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்குக் கூட எங்களை அனுமதிக்கவில்லை" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications