கிட்ட நெருங்க முடியாது! ராஜஸ்தானில் மீண்டும் மலரும் தாமரை! காங்கிரசுக்கு ஷாக் அளித்த கருத்து கணிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2018 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வராக உள்ளார்.

தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் பல பிரச்சனைகள் வெடித்தன. அதாவது முதல்வர் பதவி விஷயத்தில் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே பெரிய யுத்தமே நடந்தது. இதனால் பாதியில் ஆட்சி கலையும் எனவும் கணிக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி திறமையாக செயல்பட்டு பிரச்சனையை சரிசெய்துள்ளன. இருப்பினும் தற்போது அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே மனக்கசப்பு இருந்தாலும் தற்போதைய சூழலில் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ், பாஜகவினர் இப்போதே தொடங்கி விட்டனர்.
ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி ஜெமரிட்டியுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் Ground Zero Research எனும் அமைப்பு சார்பில் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்து கணிப்பு என்பது அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 4ம் தேதி வரை ஒரு மாதம் நடந்தது. மொத்தம் 100 தொகுதிகளை சேர்ந்த அனைத்து சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி ராஜஸ்தானில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 200 தொகுதிகளில் பாஜக 43.58 சதவீத ஓட்டுக்கள் பெற்று 118 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அரியணை ஏறுவது உறுதியாகும்.
மாறாக தற்போது மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி 40.53 சதவீத ஓட்டுக்கள் பெற்று 76 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக ‛க்ரவுண்ட் ஜீரோ ரீசர்ஜ்' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர
மற்றவர்கள் 15.89 சதவீத ஓட்டுக்களுடன் 6 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கருத்து கணிப்பில் இன்னொரு விஷயம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய கருத்து கணிப்பு என்பது அனைவரையும் நேரில் சந்தித்து எடுக்கப்பட்டதாகும். அதோடு இது தற்போதைய சூழலில் மக்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் நபர்களின் கட்சி மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை பொறுத்து இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது தேர்தல் ரிசல்ட்டில் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications