ராஜஸ்தான்: ஆளும் காங்கிரஸுக்கு எதிராக அதிருப்தி அலை- பாஜகவுக்கு அமோக வெற்றி 'கன்பார்ம்': ABP-CVoter
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக அமோக இடங்களைக் கைப்பற்றி சரித்திர வெற்றியைப் பெறும் என்றும் ABP-CVoter கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ABP-CVoter கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்புகளில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு, பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுக்கப் போகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் வாக்காளர்களிடம் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை இன்று ABP-CVoter வெளியிட்டுள்ளது. இக்கருத்து கணிப்பு முடிவுகள்:
மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 127 முதல் 137 இடங்களை பாஜக கைப்பற்றுமாம். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களைத் தாண்டி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமாம்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 59 முதல் 69 இடங்கள்தான் கிடைக்கக் கூடுமாம். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும் பாஜக 73 இடங்களிலும் வென்றிருந்தன.
2018-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதம் 8% அதிகரிக்கும். அதாவது கடந்த தேர்தலில் 38% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 46% வாக்குகளைக் கைப்பற்றுமாம். கடந்த தேர்தலில் 39.30% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி இம்முறை 42% வாக்குகளைப் பெறும் என்கிறது .ABP-CVoter கருத்து கணிப்பு.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த நாள் முதலே கோஷ்டி பூசலில் சிக்கித் தவித்தது. முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே தற்போது வரை நீடிக்கும் இந்த கோஷ்டி பூசல், காங்கிரஸின் தோல்விக்கு பிரதான காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications