5 ஆண்டு.. பாஜக வேட்பாளரின் குபீர் வளர்ச்சி! ரூ.8.8 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்ந்த சொத்துக்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு 8.8 கோடியில் இருந்து ரூ,100 கோடியை தாண்டி உள்ளது.
ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் பிரச்சார பணிகள் தீவிரமடைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டு உள்ள சொத்து மதிப்பு விபரங்கள் போன்றவை தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராக்கெட் வேகத்தில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு உயர்ந்து இருப்பது பலரை மலைக்க வைத்து இருக்கிறது. பாஜக சார்பில் பிகானெர் கிழக்கு தொகுதியில் போட்டியிடுபவர் சித்தி குமாரி.
5 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு 11 மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஆம், 2018 சட்டசபைத் தேர்தலில் ரூ.8.89 கோடி சொத்து மதிப்பு வைத்து இருப்பதாக சித்தி குமாரி கணக்கு காட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தொட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவர் குடும்ப பின்னணிதான். இவர் பிகானெர் ராஜ குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஆவார். சித்தி குமாரியின் பாட்டி சுசிலா குமாரி கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது சொத்துக்கள் பேத்தியான சித்தி குமாரிக்கு கை மாறியது.
இதன் மூலம், சித்தி குமாரின் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.85.78 கோடியாக அதிகரித்து உள்ளது. அதேபோல் அவரது அசையும் சொத்துக்கள் ரூ.3.67 கோடியில் இருந்து ரூ.16.52 கோடியாக உயர்ந்து உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜேவின் சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது. அவரது நகை மற்றும் பணம் கையிருப்பு அதிகரித்து உள்ளது. ரூ.1.08 கோடியாக இருந்த அவரது நகை மதிப்பு தற்போது ரூ.2.40 கோடியாக அதிகரித்து இருக்கிறது. அதேபோல், பணம் கையிருப்பு ரூ.1.29 லட்சத்தில் இருந்து ரூ.2.05 லட்சமாகவும், வங்கி சேமிப்பு ரூ.51.24 லட்சத்தில் இருந்து ரூ.58.74 லட்சமாக அதிகரித்து உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications