பூசாரியின் கொடூரம்.. தலித் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரி வீடியோவை காட்டி மிரட்டி மேலும் சிலருடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் அஜ்மீரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் ஒரு குழுந்தை உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

போலீசில் புகார்
இருப்பினும் அவர் மீண்டும் வீட்டுக்கு வருவார் என்று சில நாட்கள் குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவந்தனர்.

கூட்டு பலாத்காரம்
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை ஒரு கும்பல் கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு போதை ஊசி போட்டு மயக்க வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டனர். தற்போது அவர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சி்கிச்சை அளித்து வருகின்றனர்.

பூசாரியின் கொடூர செயல்
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரால் அதிகமாக பேச முடியவில்லை. இருப்பினும் சில விஷயங்களை அவர் போலீசில் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் துணை கண்காணிப்பாளர் சாவி சர்மா கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப பூசாரியாக சஞ்சய் சர்மா உள்ளார். இந்த நபர் சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பிறகு வீடியோவை வெளியே விடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
மேலும் அந்த வீடியோவை காண்பித்து மேலும் சிலருடன் சஞ்சய் சர்மா அந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்த வேளையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயக்க நிலையில் இருந்ததால் அந்த பெண்ணை எத்தனை பேர் பலாத்காரம் செய்தனர் என்பது பற்றிய விபரங்களை அவர் கூறவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications