உதய்பூர் படுகொலையால் பதற்றம்.. ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். அதிமுக்கிய ஆலோசனை..வியூகங்கள் உருவாகும்?
ஜெய்ப்பூர்: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 3 நாள் அதிமுக்கிய ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தானில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான உட்கட்சி மோதல்களுக்கு இடையே காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவை 101 எம்.எல்.ஏக்கள். ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இரண்டும் சம வலிமையில் உள்ளன. ஆளும் காங்கிரஸில் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி கோஷ்டியின் குமுறல் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இந்து டெய்லர் ஒருவரை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் மதமோதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் இத்தகைய மதமோதல்கள் மூலம் வாக்குகளை ஒருமுகப்படுத்துகிற போக்குகள் தொடருகின்றன. அதே பார்முலாவைத்தான் வலதுசாரிகள் இப்போதும் ராஜஸ்தானில் செயல்படுத்துகின்றன.
இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் Muslim Rashtriya Manch அமைப்பானது உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட கன்னையாலால் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற கூட்டங்களை நடத்துகிறது. முஸ்லிம் வாக்குகளையும் தங்கள் வசமாக்கும் யுக்தியுடன் ஆர்.எஸ்.எஸ். இப்படி தமது சிறுபான்மை பிரிவை களமிறக்கி இருக்கிறது.
இந்த பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாட்கள் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமையன்று ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய பதற்ற சூழ்நிலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஆனாலும் இது வழக்கமான கூட்டம் என்கிறது ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications