ராஜஸ்தான் கொடூரம் - பெண் குழந்தையை உயிருடன் புதைத்து வழிபாடு! பலியான பரிதாபம்!!
பரத்பூர்: மூட நம்பிக்கையின் உச்சமாக ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் பெண் குழந்தையை உயிருடன் புதைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதில் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கும்ஹெர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் பெண் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்துள்ளது.
அந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு செல்லாமல் சாமியாடி ஒருவரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்த சாமியாடியும் உயிரோடு புதைத்து வழிபட்டால் அந்த குழந்தைக்கு வயிற்றுப் போக்கு சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து பெண் குழந்தையை உயிருடன் புதைத்து ஊரே கூடி வழிபாடு நடத்தியிருக்கிறது. இந்த தகவல் அறிந்த போலீசார் வழிபாடு நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
புதைக்கப்பட்ட பெண்குழந்தையை மீட்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் பரிதாபமாக அந்த பெண் குழந்தை இறந்துவிட்டது.
மூடநம்பிக்கைகளின் உச்சமாக ஒரு இரண்டரை வயதான பெண் குழந்தையின் உயிரே போன சம்பவம் பெரும் துக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications