
உச்சக்கட்ட கொடுமை! கணவரை கட்டி போட்டு.. கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்.. வெலவெலத்து போன கிராமம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ள கூட்டு பலாத்கார சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைக்கும் வகையில் உள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். அதிலும் பாலியல் குற்றங்கள் சமீபமாகக் கணிசமாகவே அதிகரித்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இளம்பெண் பலாத்கார வழக்கு.. அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைன் அதிரடி கைது..பரபர தகவல்!

ராஜஸ்தான்
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ள கூட்டுப் பலாத்கார சம்பவம் அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது. ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் அவரது கணவர் முன்னிலையிலேயே 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருடர்கள்
கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் அப்பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம் போலத் தூங்கத் தயாராகி உள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத நான்கு பேர் அவர்கள் வீட்டில் கொள்ளையடிக்க அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் தம்பதி அஞ்சிவிட்டனர்.

மிரட்டல்
அவர்கள் அஞ்சியதைக் கவனித்த திருடர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர். மேலும், கணவரின் மிரட்டி அவரது ஆடைகளைக் கடந்த திருடர்கள், அவரிடம் இருந்த ரூ. 1400ஐ பிடுங்கிக் கொண்டனர். மேலும், கூடுதலாகப் பணம் நகைகளைக் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால், அந்த தம்பதி தங்களிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது. இதை நம்பாமல் அந்த கொள்ளையர்கள் வீடு முழுக்க தேடியுள்ளனர்.

கணவர் கண் முன்னே பலாத்காரம்
இருப்பினும், அவர்களால் வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், கணவர் கண் முன்னாலேயே பெண்ணை கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதி வெள்ளிக்கிழமை முழுக்க வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.

புகார்
பின்னர், ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். அதேநேரம் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார்
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அந்த 4 பேரும் கொள்ளையடிக்கவே அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். உள்ளே திருட விலை மதிப்புமிக்க பொருட்கள் எதுவுமே இல்லை என்பதால் ஆத்திரமடைந்து கணவர் கண் முன்னிலையில் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்து 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம்" என்றார்.