என்னப்பா சொல்றீங்க? 75 வருஷமாக அணையாத நெருப்புல பால் கடையா? அடடே ராஜஸ்தான் ஆச்சரியம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸும் பாஜகவும் வாழ்வா? சாவா? என முடிவுகளுக்காக காத்திருக்கின்றன. இந்த பரபரப்பான ராஜஸ்தானில்தான் 75 ஆண்டுகளாக 'அணையாத நெருப்பில்' பால் கடை நடத்துகிறவர் குறித்த தகவல்களும் வெளியான ஊடகங்களில் டாப் செய்திகளில் ஒன்றாக இணைந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ராஜஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்யும் களத்தில் நின்ற செய்தியாளர் ஒருவரது கண்ணில் பட்டதுதான் இந்த 75 ஆண்டுகால அணையாத நெருப்பில் நடத்தப்படும் பால் கடை.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சோஜாதி கேட் அருகே உள்ளது எப்போதும் சூடாக கிடைக்கும் பால் கடை. இந்த கடையின் உரிமையாளர்தான் 75 ஆண்டுகளாக அணையாத நெருப்பில் பாலை சூடு செய்கிறோம் என்கிறர்.
#WATCH | Jodhpur, Rajasthan: The shop owner of a milk store situated near Sojati Gate of Jodhpur claims that the flame used for heating the milk has been running since 1949. pic.twitter.com/xSFp3Khvyj
— ANI (@ANI) December 2, 2023
இந்த கடையின் உரிமையாளர் விபுல் நிகுப் கூறுகையில், 1949-ம் ஆண்டு என்னுடைய தாத்தா இந்த கடையை தொடங்கினார். அப்போது நிலக்கரி, மரக்கட்டைகள் மூலமாகத்தான் பாலை சூடு செய்ய தொடங்கினார். அன்று முதல் இன்று வரை அவர் பற்ற வைத்த நெருப்பு அணைக்கப்படவே இல்லை. ஒருநாளைக்கு 22 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை இந்த கடை தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும். எங்கள் கடையின் பாலை பொதுமக்கள் விரும்பி வாங்கி குடிக்கின்றனர். அதனால்தான் 75 ஆண்டுகளாக எங்களது கடை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. என்னுடைய தாத்தா, என்னுடைய அப்பா இப்போது நான் 3-வது தலைமுறை இந்த பால் கடையை நடத்துகிறேன் என்கிறார்.
அடடே! ராஜஸ்தானின் ஆச்சரியம்தான்!
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications