ஓரம் கட்டப்பட்ட வசுந்தரராஜே சிந்தியா.. மோடியுடன் முதல் முறையாக ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஒதுக்கி வைக்கப்பட்ட பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தர ராஜே சிந்தியா நேற்று முதல் முறையாக பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 200 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிருப்தி அலை இருக்கிறது; இதனால் ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசோ, ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
ராஜஸ்தானில் பாஜகவின் முகமாக இருப்பவர் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா. ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்தே வசுந்தர ராஜே சிந்தியாவை பாஜக ஓரம் கட்டி வைத்துவிட்டது. வசுந்த ராஜேவின் ஆதரவாளர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிடவும் சீட் கொடுக்கப்படவில்லை. வசுந்தர ராஜே சிந்தியா புறக்கணிக்கப்படுவதால் பாஜக மீது அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். மேலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தும் வசுந்தர ராஜே சிந்தியா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி என பலரையும் முன்னிறுத்தவும் பாஜக முனைப்பு காட்டியது.
ஆனால் தேர்தல் களம் பாஜகவுக்கு சவாலானதாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டின. வசுந்தரராஜே சிந்தியாவை ஓரம் கட்டுவதால் பாஜகவுக்குதான் இழப்பு எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இப்போது வசுந்த ராஜே சிந்தியாவுக்கு பாஜக முக்கியத்துவம் தருகிறது. ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் வசுந்தர ராஜே சிந்தியா பங்கேற்றார். பிரதமர் மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக வசுந்த ராஜே சிந்தியா நேற்றுதான் பங்கேற்று பிரசாரம் செய்தார். இது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இருந்தாலும் சிந்தாமல் சிதறாமல் வசுந்தர ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்குமா? என்கிற சந்தேகத்தையும் அரசிய்ல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications